மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Wednesday, March 14, 2012

அமெரிக்கா தகுதியானதா???

அஸ்ஸலாமு அலைக்கும்....

கடந்த சிலநாட்களாக இந்திய பாராளுமன்றத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் "மனித உரிமை" மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை" இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோஷம் இட்டு வருகின்றனர். தமிழக எம்.பி க்கள் இந்த ஒரு விஷயதிற்காகவேணும் ஒன்றாக இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி ஒரு புறம்  இருந்தாலும், அமெரிக்காவின் அரசியல் புரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை மேலோங்குகிறது.

ஐ.நா வின் மனித உரிமைக்கான பிரகடனத்தில் இதுவரை 47 நாடுகள் கையெழுத்து இட்டு உறுப்பினர்களாக இருக்கின்றன. 24 நாடுகள் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேறிவிடும்.அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இதுவரை 22 நாடுகளின் ஆதரவு இருக்கிறது. இதில் இந்தியா ஆதரவு இருக்கட்டும். இன்னும் ஒரு நாட்டின் ஆதரவு வேண்டும். (இறுதி கட்ட போரின் பொது இலங்கையில் மனித உரிமைக்கு எதிரான தாக்குதல் இருந்தது என்பதை புறம தள்ள முடியாதுதான். இப்போது அந்த விஷயத்திற்கு வரவேயில்லை.) 

அமெரிக்காவின் குடுமி என்றுமே சும்மா ஆடாது. இப்போது இந்த தீர்மானத்தால் யாருக்கு லாபம் என்றே பார்க்கவேண்டும். இந்த தீர்மானம் நிறைவேறினால் விசாரணை குழு என்ற பெயரில் அமெரிக்கா தானாகவே தன் மூக்கை நுழைக்கும். அதன் மூலம் இலங்கைக்கு நெருக்கடி தந்து சீனாவுடன் தேய்வதை குறைத்துக்கொள்ள கூறும். கப்பல் போக்குவரத்தின் முக்கிய வழி தடமான இந்திய பெருங்கடல் பகுதியை தனக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை இலங்கையின் மீது திணிக்கும். 

ஏற்கனவே இந்திய பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவிற்கு பாலி பாஸ்பேட் தாதுக்களை வெட்டி எடுக்க சர்வதேச கடல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இருக்கிறது சீனா. இதன் மூலம் எங்கே இந்திய பெருங்கடல் மொத்தமும் சீனாவின் கட்டுப்பாடுக்குள் போய்விடுமோ என்ற கவலை அமெரிக்காவிற்கு. அப்படி போய்விட்டால், இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு தெரியாமல் ஒரு படகு கூட பயணிக்க முடியாது என்கிறபோது நீர்மூழ்கி கப்பலில் நடமாட்டமும் சாத்தியமற்று போகும். இதையெல்லாம் யோசித்தே முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய பேரரசு இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். 2010 வரை இஸ்ரேல் நாட்டுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் பாலஸ்தீன் மக்கள் மீதான மனித உரிமை மீறல் குறித்து 32 முறை கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் எந்த நாடும் இவ்வளவு கண்டனங்கள் பெற்றதில்லை. அந்நாட்டிற்கு எதிராக சிறு துரும்பை கூட கிள்ளி போடாத அமெரிக்கா இலங்கை தமிழ் மக்கள் மீது அப்படி என்ன அக்கறை? அது குறித்து மேலும் வாசிக்க
http://en.wikipedia.org/wiki/United_Nations_Human_Rights_Council#Israel கிளிக் செய்யவும்.

சுமார் 400 ஆண்டு கால வரலாற்றில் கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் போரிலேயே கழித்த அமெரிக்காவிற்கு மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வர என்ன அருகதை இருக்கிறது. அமெரிக்க இராணுவ (?) வீரன் ஆப்கானிஸ்தானில் போடும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. தன்  வெறியை தீர்க்க 16 (குழந்தைகள் உட்பட) பேர்களை சுட்டு கொன்றுள்ளான். புனித நூலான குர்ஆணை எரித்துள்ளார்கள். இவர்கள் எந்த வகையில் தகுதியானவர்கள்.

No comments:

Post a Comment