மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Sunday, March 18, 2012

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி????


குஜராத்தின் விடிவெள்ளி (?) இந்தியாவை காப்பாற்ற போகும் ரட்சகன் என்று இன்றைய மீடியாக்களால் ஓவராக சீன் காட்டப்படும் நரேந்திரமோடி குறித்து எதிர் வரும் டைம் (அமெரிக்க பத்திரிகை) இதழிலும் காட்டி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. துபாயில் இன்று காலையில் ரேடியோ ஹலோ எஃப்.எம்மில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு கடும் போட்டியாக உருவெடுப்பார் என்று ஆருடங்கள் வர துவங்கியுள்ளதாக செய்தி.

இவர் ஆட்சியில் குஜராத்தில் மின் தடை இல்லையாம், அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விட்டார்களாம் குஜராத்திகள். அதைப்போல் இந்தியாவையும் இவர் கையில் கொடுத்தால் உலகிலேயே இந்தியாவை முதன்மை நாடாக ஆக்கிவிடுவாராம். இந்தியாவிற்குள் ஒரு மாநில முதல் அமைச்சரான இவரை இன்னொரு மாநில முதலமைச்சரால், தன் மாநில எல்லைக்குள் வரக்கூடாது என்று தடை செய்யப்பட்டவர் என்ற அந்த கேவலமான பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு. தடை செய்த முதலமைச்சர் என்ற பெருமை நிதிஷ் குமாருக்கு. இவரது கட்சியின் (பா.ஜ.க.) பிகார் மாநிலத்தின் ஆளும் கூட்டணி கட்சி, தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று துரத்தப்பட்டவர்தான் இவர், எப்படி இந்தியா முழுமைக்கும் பிரதமராக வலம் வர இயலும்?

அமெரிக்காவின் அட்டூழியங்கள் மற்ற நாடுகளில் இருந்தாலும், தன் நாட்டிற்கு வர விசா அளிக்காமல் தடை செய்யப்பட்ட மோடி எந்த முகத்தைக்கொண்டு இந்திய பிரதமராக வெளிநாடுகள் அரசு முறை பயணமாக செல்வார்?

குஜராத் அரசாங்கத்தின் வளர்ச்சி அனைத்தும் மக்களுக்காக என்ற மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே குஜராத்திலும் கார்பரேட் நிறுவனங்களே அனைத்து சலுகைகளும் அனுபவிக்கின்றன. அதற்கான சிறு எடுத்துகாட்டு "குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்" மற்றும் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற பெரும் நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அவ்விடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வின் முதல்வர் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களை அதே வியாபாரத்தில் இறக்கி, அந்நிய நேரடி முதலீட்டால் என்ன தீங்கு நேரமோ அதே தீங்கு ஏற்பட வழி ஏற்படுத்திகொடுத்துள்ளார். இதன் மூலம் சிறு விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கி பெரும் கார்பரேட் முதலைகள் மேலும் பெருக்க வசதி செய்து கொடுத்துள்ளார்.

இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் உடைய நாடு. நம் நாட்டின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதுதான். இந்த சிறப்பை சீர்குழைத்தால் மட்டுமே இந்தியாவின் அபார வளர்ச்சி தடைபடும். 1990 உள்ள நிலைமைக்கு இந்தியா தள்ளப்படும். அதை செயல்படுத்த மோடி மிக வசதியானவர் என்ற எண்ணம் இன்று மேலை நாடுகள் மத்தியில் நிலவுகிறது. அது மட்டுமல்ல மேற்குலகத்தை பிடித்து ஆட்டும் இஸ்லாமோஃபோபியாவும் ஒரு காரணம்.

மோடி பிரதமரானால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள். ஏனெனில் முஸ்லிம்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்யலாமோ அனைத்தையும் மோடி செய்துள்ளார். இனவழிப்புக்கு ராஜபக்சேவிற்கு ஆசான் மோடி என்றால் மிகையில்லை (மோடிக்கு ஆசான் பிரபாகரனாக இருக்க கூடும்). கலவரத்தை தூண்டிவிடுவது, கொழுந்துவிட்டு எரியும் கலவரத்தை பயன்படுத்தி அடியாட்களை கொண்டு முஸ்லிம்களை கருவருத்தது. போலி என்கௌன்ட்டரில் இஸ்ரத் ஜகான் மற்றும் சொராப்தீன் போன்றோரை படுகொலை செய்தது என்று வெளிவந்த செய்திகள் சில. கலவரம் நடந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் குஜராத்தில் முகாம்களில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. இப்படி சொந்த நாட்டில் ஒரு இனத்தையே அகதிகளாக உருவாக்கிய நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்தால் இன்னும் என்னவெல்லாமோ நடக்கும் என்று நினைக்க பயமே மேலோங்குகிறது.

மோடி கலவரத்தை தூண்டினார் என்பதற்கு ஒரே நேரடி சாட்சியான ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டை இவர் படுத்திய பாடு உலகறிந்தது. மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று அவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் வன்முறையாளர்களை தடுக்கக்கூடாது என மோடி உத்தரவிட்டார். அத்துடன் மக்கள் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுக்கக் கூடாது என்றார். எனவே நாங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என ஐ ஏ எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவரை நேற்று மோடி அரசு கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.

சஜ்ஜீவ் பட் மீது ஃபொர்ஜரி கேஸை போட்டு உள்ளே தள்ளியுள்ளார். இவர் மீது 341, 342, 189, 193 , 195 என்று இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு எனில் கைது செய்த சஞ்சீவ் விற்கு தனது வழக்கறிஞரை சந்திக்க கூட அனுமதி இல்லை.   இதன் மூலம் தனக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை எப்படி நசுக்குவது என்று உலகிற்கு காட்டியவர் இவர். 

இவர் ஆசைப்படுவது இருக்கட்டும். இவரின் கட்சிக்குள் பிரதம வேட்பாளராக இருக்கும் வரிசையில் இவருக்கு கடைசி இடம்தான். முதலில் அருண் ஜேட்லி, இன்றைய எதிர்கட்சி தலைவராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி, அத்வானி இவர்களுக்கெல்லாம் கடைசி இடத்திலிருந்து முதலிடம் வர பகீரத பிரயத்தனம் செய்யும் மோடிக்கு பிரதமர் ஆசை சிறிது எட்டாகனிதான் என்பதில் சிறு ஆறுதல்.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மோடிதான் பிரதமர் என்று மறைமுகமாக கிளப்பிவிட்டதும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது என்று அக்கட்சியினரே ஒத்துக்கொண்டுள்ளனர்.

ஒரு மாநிலத்தில் இவர் செய்த / செய்யும் அராஜகங்கள் இந்தியா முழுதும் படர்ந்து விட கூடாது,  வேண்டாம் என்ற கவலையுடன் இதை நிறைவு செய்கிறேன்




ஓரு பத்திரிக்கையாளரையே எதிர் கொள்ள முடியாத மோடி இந்திய பிரதமராக கனவுக்கூட காண முடியாது.

1 comment: