மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Saturday, December 10, 2011

டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திருவாரூர்.


டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -

திருவாரூர்.


டிசம்பர் 6’ - ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் வரும்போது, நம் ஒவ்வொருவருடைய கண் முன்னே வருவது பாபரி  மஸ்ஜித்-தின் மீது விழுந்த கடப்பாரைகள் தான். காரணம், அவை ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தவை அல்ல... ஒவ்வொரு இஸ்லாமியரின் உயிரினும் மேலான இறை இல்லத்தின் மீது விழுந்தவை... இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சவுக்கடி. மத ஒற்றுமைக்கு பெயர் எடுத்த இந்தியாவிற்கு, உலக நாடுகள் முன் தலைகுனிவை ஏற்படுத்திய செயல் அது...

Tuesday, November 1, 2011

கொடிக்கால்பாளையத்தில் திருவாரூர் நகரமன்றத் தலைவரின் ஆய்வுப் பணி

திருவாரூர் நகராட்சியின் 7-வது மற்றும் 8-வது வார்டுகளை உள்ளடக்கிய கொடிக்கால்பாளையம் பகுதியில், மேலத்தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, நடுத்தெரு மற்றும் வடக்குத் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை, திருவாரூர் நகராட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 

Saturday, October 29, 2011

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கொடிக்கால்பாளையம் வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவுகள். வேட்பாளர் பெற்ற வாக்குகள் வருமாறு.

மேலத்தெரு - ம.ம.க. கவுன்சிலர் பணிகள்

தொடர்ந்து பெய்துவரும் மழையால், கொடிக்கால்பாளையம், மேலத்தெரு மையவாடி முனையிலிருந்து, ஜும்’ஆ பள்ளிவாசல் வரையிலும் சாலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரால், போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து, அதில் மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படும் நிலையில், இன்று (27-10-2011, வியாழக்கிழமை) காலை நமது 7-வது வார்டு கவுன்சிலர் ஐ. கலிபுல்லா மற்றும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சகோதரர்கள், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் மேற்பார்வையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை வடியச் செய்யும் பணியில் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனர்.

Tuesday, June 7, 2011

நாம் ஏன் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம்.

நாம் ஏன் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம்.

1989 - ம் ஆண்டு இலங்கை அரசுடன் செய்துகொண்டிருந்த போர்நிறுத்த உடன்படிக்கையை விடுதலை புலிகள் உடைத்தது. அதனை தொடர்ந்து அவர்கள் அரசாங்க அலுவலகங்களையும், முஸ்லிம்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்க தொடங்கினார்கள். அதற்கு புலிகள் சொன்ன காரணம் "முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள்". அதில் என்ன தவறு? தங்களுக்கு யார் பாதுகாவலர்களோ அவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். 

ஜூலை 24, 1989 பட்டிகலோவ மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயிலில் 4 இஸ்லாமிய இளைஞர்களை கொன்றார்கள்.  

ஜூலை 29, 1989 சாமந்துறை என்ற ஊரில் உள்ள  பள்ளிவாயிலில் 10 இஸ்லாமியரை கொன்றார்கள்.  

இதனை விட கொடுமையான நிகழ்வு காத்தான்குடியில், 

காத்தான்குடி என்பது இலங்கையின் கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் இஸ்லாமியரை பெரும்பான்மையினராக (90%) கொண்ட நகரமாகும் . 1990 வருடம் ஆகஸ்டு மாதம், விடுதலை புலிகள் "காத்தான்குடியிலிருந்து மக்கள் அனைவரும் உடனே வெளியேறவேண்டும் அல்லது கொல்லப்படுவார்கள்  என்று அறிவித்தார்கள். சுமார் 60,000 மக்கள் வசிக்கும் நகரம் அது,   

ஆகஸ்ட் 3 , 1990 அன்று சுமார் 30 விடுதலை புலி தீவிரவாதிகள் இஸ்லாமியரை போன்று மாறுவேடம் பூண்டு கனரக ஆயுதங்களுடன் சுமார் இரவு 8:10  மணிக்கு காத்தான்குடிக்குள் நுழைந்தது. அங்கு வசிக்கும் இஸ்லாமிய சிறுவர் மற்றும் பெரியவர்கள் இஷா தொழுகையை நிறைவேற்ற கூடி இருந்தனர். 

மீர் ஜும்மா, ஹுசைனியா, மஸ்ஜித் அல் நூர் மற்றும் பௌஸி பள்ளிகளில் இஷா தொழுகையில் நிராயுதபாணியில் இருந்த அப்பாவி இஸ்லாமியர்களை  கையெறி குண்டுகளாலும், இயந்திர துப்பாக்கிகளாலும் சல்லடையாக துளைத்தெடுத்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுமார் 100 கொல்லப்பட்டார்கள். மருத்துவமனையில் 47 பேர் மரணித்தார்கள்.  இந்த படுபாதக செயலை அரங்கேற்றிய உடன் இலங்கை இராணுவத்தினரை போன்று கூச்சலிட்டுக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது பழிபோட.

கொல்லப்பட்ட அனைவரையும் மீர் சும்மா அடக்கஸ்தலத்தில் நீளமான ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதை நேரில் பார்த்த முகமது ஆரிப் (வயது 17) மாணவர்,    "நான் பள்ளிவாசலின் பக்க கதவு வழியாக தப்பித்து வரும் முன் ஒரு விடுதலை புலி ஒரு சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றான்" என்று கதறுகிறார். 

விடுதலை புலிகளுக்காக வரிந்து கட்டும் வைகோ, சீமான் போன்றோர் இது குறித்து வாயை திறந்திருக்கிறார்களா? திறக்கவும் மாட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் தானே. எல்லோருடைய இரத்தமும் சிவப்புதான். ஆனால் சிலருடைய இரத்தம் காவியாக உள்ளது, விடுதலை புலிகளைப்போல.


நன்றி: விக்கிபீடியா.  

Monday, January 24, 2011

KEIA - வின் 16 ம் ஆண்டு வருடாந்திர கூட்டம்

KEIA - வின் 16 ம் ஆண்டு வருடாந்திர கூட்டம் ஏக இறைவன் துணையுடன் துபாய் மம்சார் பார்க்கில் (Mamzar Park) கடந்த 14/01/2011 அன்று துணை தலைவர் E.K.M. சிராஜுதீன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. UAE வாழ்  கொடிக்கால்பாளையம் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு குடும்ப விழாவாக சிறப்புற்றது வருடாந்திர கூட்டம்.

14/01/2011 அன்று ஜும்ஆ விற்கு பிறகு மௌலவி முஹம்மது சாதிக் மன்பயீ இறைவசனங்கள் வாசிப்புடன் ஜனாப். இன்சான் அலி அவர்களின் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. 
முதுவை ஹிதாயத் அவர்கள் முயற்சியால் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணிகளில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியனின் சேவைகளைப் பாராட்டினார். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் அத்துனை நல்லுங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் கல்விப் பணிக்கு இன்னும் சேவைபுரிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். 


அதனை தொடர்ந்து செயலாளர் அறிக்கையை சங்க செயலாளர் K. சுல்தான் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் வரும் ஆண்டுகளில் செய்யப்பட வேண்டிய செயல்களையும் எடுத்து சொன்னார். 2010 ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிட்டர் அறிக்கை வாசிக்கப்பட்டது. 
ஊரிலிருந்து அனுப்பிய தலைவர். M.A. அப்துல் ஃபத்தாஹ் அவர்களின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.

2011 மற்றும் 2012 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. 



தலைவராக எம். சுல்தான் அப்துல் காதர் (எ) முத்து வாப்பா
,

துணைத் தலைவராக எம். முஹம்மது ரஃபி
,

செயலாளராக கே. சுல்தான் அப்துல்
காதர்,

உதவிச் செயலாளராக தமிமுல் அன்சாரி
,

காசாளர்களாக

ஹுமாயுன் கபீர் (தனி பொறுப்பு - வைப்பு நிதி)
,

எம். ஜலீல்
,

எஸ்.எம்.ஏ.ஹெச். பஹ்ருதீன் ஆகியோரும்
,

ஆடிட்டராக எஸ்.ஏ. சுப்ஹத்துல்லாவும்
,

போர்டு உறுப்பினர்களாக

ஏ.எஃப். குத்புதீன்
,

எம். ஆஷிக்
,

ஹெச். புர்ஹானுதீன்

எம். கே. ஜாஹிர் ஆகியோரும்
தேர்வு செய்யப்பட்டனர்.
  

புகைப்படங்களுக்கு இங்கே கிளிக்கவும்