மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Wednesday, June 20, 2012

ஊடக தீவிரவாதம்...


விக்கிபீடியாவில் எதேச்சையாக படிக்கும் பொது இந்த இரு செய்திகளும் என் கண்ணில்பட்டது. உலக புகழ் பெற்ற கால் பந்து வீரர்கள் இருவரும். ஒருவர் (நஸ்ரி) ஃபிரான்ஸ் அணிக்காகவும் மற்றொருவர் (ஒசில்) ஜெர்மனி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். அவரவர் தகவல் வலைபக்கத்தில் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும் மற்றொருவர் இஸ்லாத்தை பின்பற்றாதவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இஷ்டம். அந்த தகவலை ஏன் கொடுக்க வேண்டும். உலகில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்களே. அவர்களில் எத்தனையோ பேர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர கிருத்துவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் வலைதள தகவல் பக்கத்தில் அவர் மதம் சார்ந்த தகவல் எதுவும் இருப்பதில்லையே ஏன்?

இதைப்போலத்தான் குற்றம் புரிந்தவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இஸ்லாமியராக இருந்துவிட்டால் முஸ்லிம் என்று குறிப்பிட்டு செய்தி சொல்கிறார்கள். என்னவோ உலகில் குற்றம் புரிபவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே என்பது போல் தோற்றத்தை ஊடகங்கள் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

இவை அனைத்திற்கும் காரணம் உலா ஊடகங்கள் அனைத்தும் யூதர்கள் கையில் இருப்பதுதான். அவர்கள் சொல்வதுதான் செய்தி. சமீபத்தில் முகபுத்தகத்தில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். CNN மற்றும் BBC காட்டும் காட்சியில் ஒருவருக்கு நேட்டோ படையினர் தண்ணீர் கொடுப்பது போன்று இருந்தது. அல்ஜசீரா தொலைகாட்சியில் அவரின் பின் தலையில் நேட்டோ  தீவிரவாதி துப்பாக்கியை வைத்து அழுத்துகிறான். புகைப்படம் தற்சமயம் கைவசம் இல்லை.கிடைத்ததும் உள்ளீடு செய்கிறேன்.