மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Tuesday, June 7, 2011

நாம் ஏன் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம்.

நாம் ஏன் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம்.

1989 - ம் ஆண்டு இலங்கை அரசுடன் செய்துகொண்டிருந்த போர்நிறுத்த உடன்படிக்கையை விடுதலை புலிகள் உடைத்தது. அதனை தொடர்ந்து அவர்கள் அரசாங்க அலுவலகங்களையும், முஸ்லிம்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்க தொடங்கினார்கள். அதற்கு புலிகள் சொன்ன காரணம் "முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள்". அதில் என்ன தவறு? தங்களுக்கு யார் பாதுகாவலர்களோ அவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். 

ஜூலை 24, 1989 பட்டிகலோவ மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயிலில் 4 இஸ்லாமிய இளைஞர்களை கொன்றார்கள்.  

ஜூலை 29, 1989 சாமந்துறை என்ற ஊரில் உள்ள  பள்ளிவாயிலில் 10 இஸ்லாமியரை கொன்றார்கள்.  

இதனை விட கொடுமையான நிகழ்வு காத்தான்குடியில், 

காத்தான்குடி என்பது இலங்கையின் கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் இஸ்லாமியரை பெரும்பான்மையினராக (90%) கொண்ட நகரமாகும் . 1990 வருடம் ஆகஸ்டு மாதம், விடுதலை புலிகள் "காத்தான்குடியிலிருந்து மக்கள் அனைவரும் உடனே வெளியேறவேண்டும் அல்லது கொல்லப்படுவார்கள்  என்று அறிவித்தார்கள். சுமார் 60,000 மக்கள் வசிக்கும் நகரம் அது,   

ஆகஸ்ட் 3 , 1990 அன்று சுமார் 30 விடுதலை புலி தீவிரவாதிகள் இஸ்லாமியரை போன்று மாறுவேடம் பூண்டு கனரக ஆயுதங்களுடன் சுமார் இரவு 8:10  மணிக்கு காத்தான்குடிக்குள் நுழைந்தது. அங்கு வசிக்கும் இஸ்லாமிய சிறுவர் மற்றும் பெரியவர்கள் இஷா தொழுகையை நிறைவேற்ற கூடி இருந்தனர். 

மீர் ஜும்மா, ஹுசைனியா, மஸ்ஜித் அல் நூர் மற்றும் பௌஸி பள்ளிகளில் இஷா தொழுகையில் நிராயுதபாணியில் இருந்த அப்பாவி இஸ்லாமியர்களை  கையெறி குண்டுகளாலும், இயந்திர துப்பாக்கிகளாலும் சல்லடையாக துளைத்தெடுத்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுமார் 100 கொல்லப்பட்டார்கள். மருத்துவமனையில் 47 பேர் மரணித்தார்கள்.  இந்த படுபாதக செயலை அரங்கேற்றிய உடன் இலங்கை இராணுவத்தினரை போன்று கூச்சலிட்டுக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது பழிபோட.

கொல்லப்பட்ட அனைவரையும் மீர் சும்மா அடக்கஸ்தலத்தில் நீளமான ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதை நேரில் பார்த்த முகமது ஆரிப் (வயது 17) மாணவர்,    "நான் பள்ளிவாசலின் பக்க கதவு வழியாக தப்பித்து வரும் முன் ஒரு விடுதலை புலி ஒரு சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றான்" என்று கதறுகிறார். 

விடுதலை புலிகளுக்காக வரிந்து கட்டும் வைகோ, சீமான் போன்றோர் இது குறித்து வாயை திறந்திருக்கிறார்களா? திறக்கவும் மாட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் தானே. எல்லோருடைய இரத்தமும் சிவப்புதான். ஆனால் சிலருடைய இரத்தம் காவியாக உள்ளது, விடுதலை புலிகளைப்போல.


நன்றி: விக்கிபீடியா.