மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Wednesday, June 20, 2012

ஊடக தீவிரவாதம்...


விக்கிபீடியாவில் எதேச்சையாக படிக்கும் பொது இந்த இரு செய்திகளும் என் கண்ணில்பட்டது. உலக புகழ் பெற்ற கால் பந்து வீரர்கள் இருவரும். ஒருவர் (நஸ்ரி) ஃபிரான்ஸ் அணிக்காகவும் மற்றொருவர் (ஒசில்) ஜெர்மனி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். அவரவர் தகவல் வலைபக்கத்தில் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும் மற்றொருவர் இஸ்லாத்தை பின்பற்றாதவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இஷ்டம். அந்த தகவலை ஏன் கொடுக்க வேண்டும். உலகில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்களே. அவர்களில் எத்தனையோ பேர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர கிருத்துவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் வலைதள தகவல் பக்கத்தில் அவர் மதம் சார்ந்த தகவல் எதுவும் இருப்பதில்லையே ஏன்?

இதைப்போலத்தான் குற்றம் புரிந்தவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இஸ்லாமியராக இருந்துவிட்டால் முஸ்லிம் என்று குறிப்பிட்டு செய்தி சொல்கிறார்கள். என்னவோ உலகில் குற்றம் புரிபவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே என்பது போல் தோற்றத்தை ஊடகங்கள் ஏன் ஏற்படுத்த வேண்டும்?

இவை அனைத்திற்கும் காரணம் உலா ஊடகங்கள் அனைத்தும் யூதர்கள் கையில் இருப்பதுதான். அவர்கள் சொல்வதுதான் செய்தி. சமீபத்தில் முகபுத்தகத்தில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். CNN மற்றும் BBC காட்டும் காட்சியில் ஒருவருக்கு நேட்டோ படையினர் தண்ணீர் கொடுப்பது போன்று இருந்தது. அல்ஜசீரா தொலைகாட்சியில் அவரின் பின் தலையில் நேட்டோ  தீவிரவாதி துப்பாக்கியை வைத்து அழுத்துகிறான். புகைப்படம் தற்சமயம் கைவசம் இல்லை.கிடைத்ததும் உள்ளீடு செய்கிறேன்.


Monday, May 14, 2012

தனி மரம் தோப்பு அல்ல, வனமாகும்......

அஸ்ஸாம் மாநிலம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜோர்ஹத். அங்கு செல்ல வேண்டுமெனில் 350 கி.மீ. வாகனத்திலும் பின்னர் 30 கி.மீ. வரை சாலையே இல்லாத சாலையிலும், பின்னர் சுமார் 10 கி.மீ. அதிர்ஷ்டம் இருந்தால் படகு பயணம். பின்னர் 7 கி.மீ. மலையேற்றம். இவ்வளவும் தாண்டி சென்றால் கிராம மக்களால் முலாய் என்று அன்புடன் அழைக்கப்படும் ஜாதவ் பாயங் அவர்களை சந்திக்கலாம்.

Monday, April 16, 2012

வெறுக்கப்பட்ட மோடி....

மோடி என்றால் பிசினஸ், அவரால் இந்தியாவை ஆள முடியுமா? என்ற கேள்வியுடன் தனது அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்ட டைம் பத்திரிகை, அடுத்து Top Times 100 2012 என்ற பட்டியலை வெளியிட்டு இருந்தது. யாரெல்லாம் இந்த பட்டியலில் இடம்பெறலாம் என்ற வாக்கெடுப்பும் நடைபெற்றது. உடனே இவரது ஆதரவாளர்கள் தினமும் பலமுறைகளில் பலமுறை இவருக்கு ஆதரவாக வாக்களித்தும் (பாராளுமன்றத்திலும் இது எதிரொலித்தது) இந்துத்துவாவின் அதீத விளம்பரத்தினாலும், தகிடுதத்தங்கள் செய்தும் இறுதியில் ஒன்றும் வேகாமல், இறைவனின் பேரருளால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டு அந்த பட்டியலில் அவர் இடம்பெற தகுதியானவர் அல்ல என்ற வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, பட்டியலில் இடம்பெற கூடாது என்று அதிக வாக்குகள் பெற்றவரும் அவரே. சுமார் 2,66,684 வாக்குகள் எதிர்த்து வாக்களிக்கப்பட்டுள்ளன.

அநேக பேர்களுக்கு இம்மாதிரி ஒரு வாக்கெடுப்பு நடைபெறுவதே தெரியாத நிலையில், அவருக்கு எதிராக வாக்களிக்க சமூக ஊடகம் பெரும் உதவி செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது. முகப்புத்தகத்தில் நானும் பகிர்ந்த போது ஒரு நண்பர் "நீங்கள் பகிர்ந்த இந்த தகவல் அவருக்கு ஆதரவும் தேடித்தரலாம், அதனால் மின்னஞ்சல் வழியாக பரப்புங்கள் என்று அறிவுறுத்தினார். அதுவும் சரியாக பட்டது. அதன் பிறகு மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பினேன். இதுப்போல் பலரும் பலவழிகளில் மோடிக்கு எதிரான நிலை எடுத்ததினால் சாத்தியமாகியது. அனைவருக்கும் நன்றி.

வாக்கெடுப்பு முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.


Sunday, March 18, 2012

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி????


குஜராத்தின் விடிவெள்ளி (?) இந்தியாவை காப்பாற்ற போகும் ரட்சகன் என்று இன்றைய மீடியாக்களால் ஓவராக சீன் காட்டப்படும் நரேந்திரமோடி குறித்து எதிர் வரும் டைம் (அமெரிக்க பத்திரிகை) இதழிலும் காட்டி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. துபாயில் இன்று காலையில் ரேடியோ ஹலோ எஃப்.எம்மில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு கடும் போட்டியாக உருவெடுப்பார் என்று ஆருடங்கள் வர துவங்கியுள்ளதாக செய்தி.

Wednesday, March 14, 2012

அமெரிக்கா தகுதியானதா???

அஸ்ஸலாமு அலைக்கும்....

கடந்த சிலநாட்களாக இந்திய பாராளுமன்றத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் "மனித உரிமை" மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை" இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோஷம் இட்டு வருகின்றனர். தமிழக எம்.பி க்கள் இந்த ஒரு விஷயதிற்காகவேணும் ஒன்றாக இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி ஒரு புறம்  இருந்தாலும், அமெரிக்காவின் அரசியல் புரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை மேலோங்குகிறது.